தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கீழ்பென்னாத்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சு.சுகுமார் முன்னிலை வகித்தார். வட்டார துணை செயலாளர் சாமுவேல்அன்புமணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் பா.வேலு கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் சுடர்விழி, நிர்வாகிகள் ஜெயலட்சுமி, ரமணி, முத்துக்குமரேசன், செண்பகம் சுரேஷ், ஷர்மிளாதேவி, பிராங்கிளின், சரவணசுப்ரமணியன், செல்வராசு உள்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட். பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வித்துறை நடவடிக்கையை கைவிட வேண்டும்.

பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன், இளங்கோவன், மரியசெல்வம், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ஆல்வின்சாமுவேல் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story