தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருமருகலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் குமார், பொருளாளர் திருவருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி வரவேற்றார். மாநில தலைமை நிலை செயலர் ரமேஷ் கொள்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story