தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். மாநில துணைச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரிவின் மாவட்ட தலைவர் புலவர் ராமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.