தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொருளாளர் துரை, மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் ஜார்ஜ் இனிகோ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தகுமார், வட்டார தலைவர்கள் செல்வின், யாகப்பன், அருள்தாசன், முத்துராஜ், ஜெயசேகர் எலிசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story