தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் சேகர், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சம்பத், நிர்வாகிகள் சக்திவேலு, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் மணி கலந்து கொண்டு கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மூடப்பட்டுள்ள வேலூர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை அரசு ஆணைகளின்படி மீண்டும் அலுவலகத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story