கல்விக்காக அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார்
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்விக்காக அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்விக்காக அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு
விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் மட்டும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும் நிலையில் அனைத்து உயர்கல்வி கற்பதற்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும். மாணவ-மாணவிகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் அவர்கள் கல்வி கற்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும்.
கல்வி உதவித்தொகை
இதனை தொடர்ந்து மாதந்தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்விக்காக அதிக திட்டங்களை செயல்படுத்தி வருபவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.
உயர்கல்விக்காக ரூ.45,286 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 38,258 பள்ளிகளில் மாணவ-மாணவிகள் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ரூ.1,850 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரியை தந்துள்ளார். எனவே அவருக்கு நீங்கள் அனைவரும் உங்களது ஆதரவை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகரசபை தலைவர் மாதவன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.