குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினருக்கு கேடயங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை,
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் இவ்வாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட படைப்பிரிவினர்களில் சிறப்பாக செயல்பட்ட இராணுவப்படைப் பிரிவு, மத்திய ரிசர்வ் காவல் படைப் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படைப்பிரிவு, தேசிய மாணவர் படைப்பிரிவு, சிற்பி பெண்கள் படைப் பிரிவு ஆகிய படைப்பிரிவிற்கும், குடியரசு தின விழா அணிவகுப்பினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களுக்கும் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் போது, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், துணைச் செயலாளர் மரு. எஸ். அனு, ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story