பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார்


பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார்
x

பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தள்ளுபடி சான்று

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் 398 மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தொகை ரூ.7 கோடியே 24 லட்சத்தை தமிழக அரசு ரத்து செய்தது. அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று திருத்தங்கல் -செங்கமலநாச்சியார்புரம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பொருளாதாரத்தில் மேன்மையடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுகிறார்.

கருணாநிதி கண்ட கனவு

இதற்காக தான் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அரசியலில் கூட தற்போது அதிக அளவில் பெண்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் வெளியூர் கூட பெண்கள் தனியாக செல்ல தயங்குவார்கள். ஆனால் தற்போது கண்டம் விட்டு கண்டம் சென்று படிக்கிறார்கள், பணியாற்றுகிறார்கள். குறிப்பாக தமிழக பெண்கள் வெளிநாடுகளில் பல உயர் பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் கண்ட கனவு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேறி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியாகாளிராஜன், யூனியன் தலைவர் முத்து லட்சுமி, துணைத்தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார், துணை பதிவாளர்கள் ரவிச்சந்திரன், இசக்கியப்பன், முருகவேல், வீரபாண்டி, செங்கமலநாச்சியார்புரம் கூட்டுறவு வங்கி திருப்பதி, முன்னாள் யூனியன் தலைவர் வனராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன், ஒன்றிய செயலாளர் தங்கராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சபையர் ஞானசேகரன், பொன் சக்திவேல், திலிபன் மஞ்சுநாத், மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல எம்.ரெட்டியபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், யூனியன் தலைவர்கள் சுமதி ராஜசேகர், முத்துலட்சுமி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சிவகாசி துணை மேயர் விக்னேஷ் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story