திண்டுக்கலில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கபதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்த அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
மதுரை விமானநிலையத்தில் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர்.
பாஜக தரப்பில் மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இவர்களும் வரிசையில் நின்று வரவேற்றனர் யாரையும் மோடி தனியாக சந்தித்து பேச அனுமதிக்கவில்லை இல்லை.