பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார்..!


பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார்..!
x

IImage Courtesy : PTI

தினத்தந்தி 24 July 2022 4:13 PM IST (Updated: 24 July 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது

சென்னை,

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் கடந்த ஜூலை 19ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து . திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார்.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அவர் சென்னை வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story