பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் ராஜா, பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 72 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் சங்கரன்கோவில் பா.ஜனதா நகர தலைவர் கணேசன், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, நிர்வாகிகள் சிவன், மாரிமுத்து, சுப்பிரமணி, அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story