சேலம் வீரர்கள் 683 பேர் பங்கேற்கிறார்கள்
மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சேலம் வீரர்கள் 683 பேர் பங்கேற்க உள்ளதாக கலெக்டர் கார்மேகம் கூறினார்.
மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சேலம் வீரர்கள் 683 பேர் பங்கேற்க உள்ளதாக கலெக்டர் கார்மேகம் கூறினார்.
விளையாட்டு போட்டி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
முதல்-அமைச்சர் கோப்பைக்கு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தடகளம், நீச்சல், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட 43 வகையான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதில் 12 ஆயிரத்து 998 ஆண்கள், 5 ஆயிரத்து 627 பெண்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 625 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.
மாநில போட்டி
இதில் 683 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.