மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆய்வு


மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆய்வு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது செயலாராய்ச்சி மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து செயலாராய்ச்சி ஆசிரியர்கள் செந்தில் குமாரி, மரிய ரோஸ்லின் ஆகியோரின் எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா தேவி உடனிருந்தார். முன்னதாக செயலாராய்ச்சி, எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் தொடர்பான அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


Next Story