வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசின் சட்டதிருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி


வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசின் சட்டதிருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
x

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள சேரம்பாடியில் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் கல்வி பயின்றேன். மேல்நிலை வகுப்புகள் எங்களது ஊரில் இல்லாததால் அருகில் கேரளாவில் உள்ள பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளை ஆங்கில வழியில் படித்தேன்.

பின்னர், தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு அடிப்படையில், குரூப்-2 தேர்வு எழுதி சென்னை புழல் சிறையில் உதவி சிறைத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு குரூப்-1 தேர்வுக்காக விண்ணப்பித்தேன்.

உரிமை பாதிப்பு

அப்போது, தமிழ்வழியில் படித்தமைக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை பெற புதிய சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், அதன்படி 1 முதல் 12-ம் வகுப்புகள் வரை தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தரப்பில் கேட்கப்பட்டது.

எனவே தமிழக அரசின் இந்த சட்டதிருத்தம் எனது அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்க வேண்டும். சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "தமிழக அரசின் புதிய சட்டத்திருத்தத்தின்படி அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியும்.

ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது" என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story