சிறையில் கைதிக்கு கொரோனா


சிறையில் கைதிக்கு கொரோனா
x

நாகர்கோவிலில் சிறையில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சிறையில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைதிக்கு கொரோனா

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் மூலம் திமிங்கலத்தின் உமிழ் நீர் கட்டியை கடத்த முயன்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 42 வயதுடைய ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு நேற்று முன்தினம் சளி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 கைதிகளுக்கு சளி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

13 பேருக்கு பாதிப்பு

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மூலமாகவும் 613 பேருக்கு சளி பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது 3 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சுகாதார பணியாளர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.


Next Story