வனத்துறையினர் விசாரணையின்போது கைதி ஓட்டம்


வனத்துறையினர் விசாரணையின்போது கைதி ஓட்டம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறையினர் விசாரணையின் போது கைதி ஓடினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரத்தில் தென்னந்தோப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக செம்பட்டையான் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 22), டேனியல் ராஜ்குமார் (23), தேவராஜ் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 5 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வனச்சரக அலுவலர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில், விசாரணையின் போது டேனியல் ராஜ்குமார் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வனத்துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாரும் தப்பி ஓடிய டேனியல் ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



Next Story