பிரித்தியங்கிரா தேவி கோவில் பால்குட திருவிழா
சீர்காழி அருகே பிரித்தியங்கிரா தேவி கோவில் பால்குட திருவிழா
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வருஷபத்து கிராமத்தில் பழமை வாய்ந்த பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது . இங்கு ஐயப்பன் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. இந்தக் கோவிலில் குடமுழுக்கு தினத்தை முன்னிட்டு பால் குட திருவிழா நடந்தது. பால்குட திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடத்தை தலையில் சுமந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பால்குடங்கள் கோவிலை வந்தடைந்ததை அடுத்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஐயப்பன் பிறந்த நட்சத்திரத்தில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு வீதி உலா நடந்தது. இதில் எடமணல், சீர்காழி, வழுதலைக்குடி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.