டிரைவர் சாவில் திடீர் திருப்பம்; கொலை செய்யப்பட்டது அம்பலம்


டிரைவர் சாவில் திடீர் திருப்பம்; கொலை செய்யப்பட்டது அம்பலம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே டிரைவர் சாவில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

பேரிகை அருகே டிரைவர் சாவில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகம் பக்கமுள்ள முக்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மகன் நாகேஷ் (வயது35). பிக்கப் வேன் டிரைவர். இவருக்கு முனிலட்சுமி என்ற மனைவியும், 1 மகனும், மகளும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி வெளியே சென்ற நாகேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அப்போது அவர் அத்திமுகம் பகுதியில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மனைவி முனிலட்சுமி கடந்த 11-ந் தேதி பேரிகை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேசை தேடி வந்தனர். இதனிடையே கடந்த 16-ந்தேதி அத்திமுகத்தில் உள்ள ஒரு தாபா ஓட்டல் பின்புறம் நாகேசின் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 தனிப்படை அமைப்பு

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், நாகேசின் கழுத்து எலும்பு உடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அதில் திடீர் திருப்பமாக அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், வினோத் மற்றும் கணேஷ் பாபு ஆகியோர் தலைமை யிலான தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story