பயணிகள் ஏற்றுவதில் நடந்த தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் கைது


பயணிகள் ஏற்றுவதில் நடந்த தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் கைது
x

பயணிகள் ஏற்றுவதில் நடந்த தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

பயணிகள் ஏற்றுவதில் நடந்த தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் விமலன் (வயது 35). இவர் கடந்த 16-ந்தேதி சென்னையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார்.

இந்த நிலையில் அன்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தனியார் பஸ் கண்டக்டர் மற்றும் பயணிகளை ஏற்றும் தரகர் ஆகியோருக்கும், விமலனுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் விமலன் தாக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விமலனை தாக்கியதாக குடியாத்தம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் உமாபதி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story