தூத்துக்குடி அருகேதனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி அருகேதனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராடடத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊருக்குள் செல்போன் கோபுரம் அமைப்பதை கைவிட்டு ஊருக்கு வெளியில் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story