தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்


தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
x

ஆம்பூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் கடந்த ஆண்டு 2-ம் ஆண்டு படித்த 120 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவில் 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி நேற்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேசி இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story