தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலி


தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலி
x

தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியானார்.

புதுக்கோட்டை

விராலிமலை அருகே உள்ள நவக்கோன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் விராலிமலை அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பின்னர் அந்த நிறுவனத்தின் எதிரே உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்த சென்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரான திருச்சி மாவட்டம் புதூர் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அஜய் ஜெராமி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story