தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

தா.பேட்டை வடுகர் தெரு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சசிகுமார் (வயது 31). இவரது மனைவி மஞ்சு (31). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஸ்ரீநிதின் என்ற மகன் உள்ளான். சசிகுமார் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி, அதே ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முகரம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சசிகுமார் தனது மனைவி மஞ்சு மற்றும் குழந்தையுடன் தா.பேட்டைக்கு வந்துள்ளார். சசிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை மஞ்சு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story