தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக்(வயது 27). இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு வயிற்று வலி தீரவில்லை. இதில் மனமுடைந்த தீபக், ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பெற்றோர்கள் அவரை மீட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, அங்குள்ள ஒரு அறையில் தீபக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story