தனியார் நிறுவன மேலாளர்வீட்டில் ரூ.1 லட்சம் வெள்ளி பொருட்கள் திருட்டு


தனியார் நிறுவன மேலாளர்வீட்டில் ரூ.1 லட்சம் வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.1 லட்சம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாமோதர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 48). இவர் தூத்துக்குடி அருகே மேல அரசடியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினருடன் திருமண விழாவுக்கு சென்று விட்டாராம். மீண்டும் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து உள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் கிறிஸ்டோபர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது, அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story