தனியார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தனியார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

தனியார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனிராஜ் மகன் கார்த்திக் (வயது 31). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். சர்மிளா (30) என்பவரை காதலித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கார்த்திக் வேலை பார்த்துவரும் நிறுவனத்தில் இருந்து அவரை நீக்கம் செய்யப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டுக் கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story