வீட்டிற்கு நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு
வீட்டிற்கு நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்
மதுரை
மதுரை புதூர் லூர்து நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் லூர்துநகர் 7-வது தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று ஆசிரியை அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதில் 2 பவுன் சங்கிலி மட்டும் கொள்ளையர்கள் கையில் சிக்கியது. இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story