தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து


தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
x

காவேரிப்பாக்கம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த ஜம்புகுளம் கூட்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த பள்ளி வேன் நேற்று பாணாவரம் பகுதி வழியாக கூத்தம்பாக்கம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 18 மாணவர்களை ஏற்றிக் கொண்டு காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை நோக்கி வந்துள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலைத்தடுமாறி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்ட வசமாக 17 மாணவர்கள் காயமின்றி தப்பினர். ஒரு மாணவனுக்கு மட்டும் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவனை புதுபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். வேன்டிரைவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story