உவரி போலீஸ் நிலையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் தீ


உவரி போலீஸ் நிலையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் தீ
x

உவரி போலீஸ் நிலையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனம் மோதியதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உவரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் டெபின் (வயது 16) பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து உவரி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வாகனம் சேதம் அடைந்தது. அந்த வாகனத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து உவரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Next Story