உடுமலையில் 198 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


உடுமலையில் 198 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
x

உடுமலையில் 198 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலையில் 198 பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தகுதிச் சான்று

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் பள்ளிகளின் சார்பில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்யும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்வார்கள். பள்ளி வாகனங்களுக்கான அரசு விதிகள் முழுமையாக பூர்த்தி செய்யாத வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்காமல் அவற்றை இயக்க தடை விதிப்பார்கள்.தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை பெற பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் செயல்பட்டு வரும் 33 தனியார் பள்ளிகளில் 257 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 198 வாகனங்கள் நேற்று உடுமலை நேதாஜி மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.அந்த வாகனங்களை உடுமலை ஆர்.டி.ஒ. ஜஸ்வந்த் கண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல், தாராபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மீட்புப் பணிகள்

ஆய்வின் போது பள்ளி பஸ்களின் படிக்கட்டுகள், தளம் மற்றும் இருக்கைகளின் உறுதித் தன்மை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விபத்துக் காலத்தில் உதவும் வகையில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசர வழி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் முடிவில் 7 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.அந்த குறைபாடுகளை சரி செய்து தகுதிச் சான்று பெறும் வரை அந்த வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது.மேலும் மீதமுள்ள 59 வாகனங்களும் ஆய்வுக்குக் கொண்டு வரப்பட்டு தகுதிச்சான்று பெற்ற பிறகே பள்ளி மாணவர்களுக்காக இயக்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த ஆய்வின் போது உடுமலை தீயணைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விபத்துக் காலத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள், தீ விபத்தின் போது செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர். ஆய்வின் போது உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம், தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

---

2 காலம்

பள்ளி வாகனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.


Next Story