தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் வருகிற 18-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வருகிற 18-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளானர்.

இந்த மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பணியினை தேர்வு செய்வதற்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயன்பெற அழைப்பு

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை ramnademployment2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04567-230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலை தேடுபவர்கள் தங்களது பயோடேட்டா, அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story