திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 12-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி மற்றும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர், மருந்தாளுநர் படித்தோர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்லும் 12 மற்றும் 26-ந் தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என கலெக்டர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.