பிரியா உயிரிழந்த விவகாரம் - கவனக்குறைவு மரணம் என போலீசார் வழக்கு பதிவு
.சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததை ,கவனக்குறைவு மரணம் என மாற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சென்னை,
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர். அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததை ,கவனக்குறைவு மரணம் என மாற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று நடவடிக்கை தொடங்கும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்