சிறந்த மாணவர்களுக்கு பரிசு
சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விருதுநகர்
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் செந்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் 10,12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், மூனீஸ்வரி இனியவன், சரஸ்வதி பாண்டியராஜன், தீபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். காரியாபட்டி வர்த்தகசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் செந்தில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
Related Tags :
Next Story