குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் பரிசு


குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் பரிசு
x

போடி நகராட்சியில், குப்பகைளை தரம் பிரித்து கொடுத்தால் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தேனி

போடி நகராட்சி பகுதியில், குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என சிறப்பான முறையில் தரம் பிரித்து கொடுக்கும் குடும்பத்தினருக்கு பரிசு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நகராட்சி 20-வது வார்டில் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து தலைவர், ஆணையாளர், 20-வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரன் ஆகியோர் வீடு, வீடாக சென்று பரிசு வழங்குவதற்கான அட்டைகளை வழங்கினர்.

மேலும் இந்த பரிசு திட்டம் குறித்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தினமும் காலையில் குப்பைகளை சேகரிக்க வருகிற துப்புரவு பணியாளர்களிடம், சரியான முறையில் குப்பைகள் பிரித்து கொடுக்கப்படுகிறதா? என்று அந்த அட்டையில் குறிக்கப்படும். 30 நாட்கள் முடிவில் நல்ல முறையில் குப்பைகளை பிரித்து கொடுத்த வீடுகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போடி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்


Next Story