அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கோவில்பட்டி வேலாயுதபுரம் கிளை சார்பில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடந்தது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத்தலைவர் என்ஜினீயர் தவமணி தலைமை தாங்கி, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 587 மதிப்பெண்கள் பெற்ற பி.பேச்சிலட்சுமி, ஈ.வே.அ. உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் 467 மதிப்பெண்கள் பெற்ற இலக்கியா, 464 மதிப்பெண்கள் பெற்ற ஜோதிலட்சுமி, 459 மதிப்பெண்கள் பெற்ற செல்வபிரியா, சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற நிதிஷ்லிங்கம் உள்ளிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் நற்பணி மன்ற வேலாயுதபுரம் கிளை தலைவர் ஏ.முருகன், இணை செயலாளர் துர்கேஷ் நளினி, நாகராஜன், சுப்புராஜ், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.