அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
10,12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு:அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
வாயமேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஆளுநர் சவரிராஜ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராமஜெயம், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் மாதவன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கடந்த ஆண்டு 103 ஜோடி கண்களை தானமாக வழங்கியவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை பாராட்டி கவுரவித்தார். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக 2023-24-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை துணை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக எஸ்.ஆர்.செந்தில்குமார், செயலாளராக டி.செந்தில் நாதன், பொருளாளராக ஜி.கே.திருமுருகன் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முத்துப்பேட்டை, திருவாரூர், வேதாரண்யம், ஆயக்காரன்புலத்தை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.