வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு


வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
x

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ரெயில் நிலைய குழந்தைகள் மையம் பொறுப்பாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். நாட்டம்பள்ளி தாசில்தார் குமார், ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

கபடி, ஓட்டப்பந்தயம், கோ-கோ, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story