கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசு
மேல்மலையனூர் அருகே கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழுப்புரம்
மேல்மலையனூர்:
மேல்மலையனூர் அருகே எய்யில் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் 7-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கும் விழா அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருண்தத்தன் தலைமை தாங்கி, பரிசுத்தொகை, கோப்பை ஆகியவற்றை வழங்கினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை கெம்பீரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story