பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு


பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் எஸ்.ஆர்.ஈஸ்வரப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டாக்டர். ஜி.கார்த்திகேயன், இணைச் செயலாளர் கே.செந்தாமரை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் மணி சேகரன் வரவேற்றார்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற பி.கணேசன், ஆர்.என்.தாமோதரன், ஆர்.கோகுல் ஆகியோருக்கு ஏ.டி.குப்புசாமி ஆனந்தர் நினைவு பரிசாக முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த பி.சர்வேஸ்வரன், இரண்டாம் இடம் பிடித்த கே.பாவனா, எஸ்.கேசவன், மூன்றாம் இடம் பிடித்த வி.பி.ஜெய் ஆகாஷ் ஆகியோருக்கு ஏ.கே.கிருஷ்ணன் நினைவு பரிசாக முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசினை பள்ளியின் நிர்வாகிகள் வழங்கினர்.

பள்ளியின் பொருளாளர் கவிஞர் மா.ஜோதி, இணைச் செயலாளர் ஏ.எல். திருஞானம், நிர்வாக அலுவலர் வேலாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் செயலாளர் கே.சொல்முத்தழகன் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். முடிவில் துணை முதல்வர் ஜே.பிரபாவதி நன்றி கூறினார்.


Next Story