கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு
செங்கோட்டையில் கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூரில் நகர வாணியா் சமுதாய 24-ம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு மற்றும் காந்தி் ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட காந்தி திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனா். விழாவிற்கு நகர வாணியா் சமுதாய தலைவா் (கல்வி நிதி) குமரேசன் தலைமை தாங்கினார். குற்றாலம் வாணியா் பவனம் டிரஸ்ட் தலைவா் துரைராஜ், மேலூர் சமுதாய தலைவா் ரவி, தஞ்சாவூர் தெரு சமுதாய தலைவா் முருகன், எஸ்.ஆர்.கே. தெரு கிழக்கு சமுதாய தலைவா் மோகன்ராஜ், எஸ்.ஆர்.கே. தெரு மேற்கு சமுதாய தலைவா் முருகையா, தஞ்சாவூர் தெரு துணைத்தலைவா் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைச்செயலாளா் மாடசாமி இறைவணக்கம் பாடினார். செயலாளா் செண்பகக்குற்றாலம் வரவேற்றார். துணைத்தலைவா் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளா் முருகன் வரவு- செலவு கணக்கு வாசித்தார். மேலுார் வாணியா் சமுதாய செயலாளா் செந்தில்ஆறுமுகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதனைதொடா்ந்து 10, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைதொடா்ந்து விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்ற ஹரீஸ்கார்த்திக் என்ற மாணவனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.