திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா.கவிதா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் பெ.பல்லவன் வரவேற்றார்.

விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது அறிவுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர்கள் சி.கே.சுப்பிரமணி, கே.ஏ.குணசேகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மோகன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கே.சி.ராணி சின்னக்கண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் இரா.கோபால் நன்றி கூறினார்.

விழா நிகழ்ச்சிகளை ஆங்கிலத்துறை தலைவர் பெ.பொன்னி வளவன், வணிகவியல் துறை தலைவர் எல்.ரூபா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Next Story