போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் 28-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை கல்லூரி தலைவர் வி.திவாகரன் தொடங்கி வைத்தார். முதல்வர் சி.அமுதா வரவேற்றார். ஓட்ட பந்தயம், குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தலைவர் வி.திவாகரன் பரிசுகள்- கேடயங்களை வழங்கினார். முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் வக்கீல் தமிழரசன், அக்ரி ராஜேந்திரன், ராஜதுரை, பாலமுருகன், கல்வியியல் கல்லூரி முதல்வர் அன்புசெல்வி, துணை முதல்வர்கள் காயத்ரிபாய், உமாமகேஸ்வரி மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனர். ஆண்டறிக்கையை உடற்கல்வி துறை பேராசிரியர் ஜமுனா வாசித்தார். முடிவில் விளையாட்டு துறை செயலாளர் மாணவி சுவேதா நன்றி கூறினார்.