போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு துணை மேயர் ராஜூ பரிசு வழங்கினார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை தச்சநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, பல்வேறு கலைநிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பால் இசக்கி, மாநகராட்சி கவுன்சிலர் நித்திய பாலையா, சுந்தர், தி.மு.க. பிரமுகர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story