ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய தகவல் தொடர்பு பிரிவின் ராமநாதபுரம் மற்றும் பாண்டிச்சேரி பொறுப்பாளர் வேல்முருகன் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷர்மிளா, யோகாவால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறினார். முன்னதாக கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்து தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ேமலும் மாணவர்களின் யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் தாளாளர் நாசர் அலி கொடியசைத்து தொடக்கி வைத்தார். கல்லூரியின் நிர்வாக அலுவலர் நாகராஜன் மற்றும் துணை முதல்வர் கவிதா, பேராசிரியர்கள் ஜெகஜோதி பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஜோசப் ஜெய்சன், சேது ராஜ் பாண்டியன், மரியமகிழ்ச்சி, புஷ்பரதி, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், நூலகர் செந்தில் கணேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி கலந்து கொண்டனர். யோகா தினம் பற்றி ஓவியப் போட்டி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு . முடிவில் தொழில்நுட்ப உதவியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story