ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மதுசூதுன்ரெட்டி பரிசுகள் வழங்கினார். விழாவில் கலெக்டர் பேசும் போது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே "என் வாக்கு - என் உரிமை" என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 1,495 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் 141 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி வருகின்ற 26, 27-ந்தேதிகளில் நடக்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நான் முதல்வன் திட்ட உதவி மையத்தின் மூலம் 2021-2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு நிறைவு செய்தவர்களில் 2022-2023-ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடர இயலாத 8 மாணவர்களுக்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து நீட் மறுதேர்வு எழுதுவதற்கான பயிற்சி மையத்தில் சேர்வதற்கும், மதுரை வக்பு வாரிய கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பெறுவதற்கும் வசதியாக கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து மொத்தம் ரூ.58 ஆயிரம் ஒதுக்கீடு செய்ததற்கான உத்தரவையும் கலெக்டர் வழங்கினார். விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story