கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பெற்றது.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி புதுநகர் காலனியில் கபடி போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல் பரிசை பூனைகுத்திப்பட்டி அணியும், 2-வது பரிசை முக்கண்ணாமலைப்பட்டி அணியும், 3-வது பரிசை பரமக்குடி அணியும், 4-வது பரிசை புதூர் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை புதுநகர் காலனி இளைஞர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story