போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரியா திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவனத் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்றார். வள்ளியூர் பங்குத்தந்தை ஜான்சன் அடிகளார் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து மரியாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி அனைவரும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி, சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வணிகவியல் துறைத்தலைவி ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story