பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்

விருதுநகர்

விருதுநகர் லட்சுமிநகரில் லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், மீனாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் தைப்பொங்கல் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குடியிருப்புகளில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கு என கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சிலம்ப போட்டி, மாறுவேடப்போட்டி, பானை உடைக்கும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் பரிசளிப்பு விழா லட்சுமி நகரில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். முன்னதாக விழாவிற்கு குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுச்சாமி வரவேற்றார். முடிவில் பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story