எடப்பாடி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் இரவு விருந்தால் பரபரப்பு-மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை


எடப்பாடி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் இரவு விருந்தால் பரபரப்பு-மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
x
சேலம்

எடப்பாடி:

எடப்பாடி ஒன்றியம் சவுரிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உ்ளளது. இந்த பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், இரவு நேரத்தில் சத்துணவு பணியாளர்களை வரவழைத்து சமையல் செய்து விருந்து வழங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் சென்றது. அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் மாதேஷ் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story